பிரிட்டன் கடற்கரையில் மீட்கப்பட்ட உக்ரேனிய சிறுமி மரணம்
பிரிட்டனின் டெவோன் கடற்கரையில் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட உக்ரேனிய சிறுமி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெவோன் பகுதியில் மாயமானதாக கூறப்படும் 13 வயது உக்ரேனிய சிறுமி, கடற்கரையில் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டார். தொடர்ந்து ஹெலிகொப்டர் மூலமாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த நிலையில், அவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் டெவோன் மற்றும் கார்ன்வால் பொலிசார் தெரிவிக்கையில், முறையாக அடையாளம் காணப்பட்டதுடன் அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
மார்ச் 4ம் திகதி சனிக்கிழமை மாலை டெவோன் பகுதியில் இருந்து 14 வயது சிறுமி காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து உள்ளூர் மக்கள் மற்று பொலிஸ் ஹெலிகொப்டர் உதவியுடன் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும்,
இந்த நிலையில் டெவோன் கடற்கரையில் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மரணமடைந்த சிறுமி உக்ரேன் நாட்டவர் என்பதால், அந்த நாட்டு தூதரகத்திற்கும் பிரிட்டன் உள்விவகார அமைச்சகத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.