ஐ.நா பொதுச்செயலாளர் மீது குற்றம்சாட்டிய உக்ரைன் அதிபர்!
ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்(Antonio Guterres) உக்ரைனுக்கு வருவதற்கு முன்பாக ரஷ்யா செல்ல இருப்பதில் நீதியும் இல்லை, நியாமும் இல்லை என அதிபர் ஜெலன்ஸ்கி(Volodymyr Zelensky) சாடியுள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையே மனிதாபிமான பேச்சுவார்த்தை முன்னெடுப்பை செய்துவரும் துருக்கிக்கு, நாளை செல்ல உள்ள குட்டரெஸ்(Antonio Guterres) அங்கு அதிபர் எர்டோகனை(Erdogan) சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து செவ்வாயன்று ரஷ்யா சென்று அதிபர் புடினுடன்(Vladimir Putin) அவர் பேச உள்ளதாகவும், பின்னர் வியாழக்கிழமை அவர் உக்ரைன் செல்ல இருப்பதாகவும் ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், ஜெலன்ஸ்கி (Volodymyr Zelensky)தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.