நேட்டோ அமைப்புக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம்

Russia Ukraine War NATO Zelensky Airspace Ukrainian President
By Independent Writer Mar 05, 2022 07:19 AM GMT
Report

நேட்டோ அமைப்புக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி (Zelenskyy) கண்டனம் தெரிவித்துள்ளார்.

தங்கள் வான்பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கக் கோரி நேட்டோ அமைப்பிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி (Zelenskyy) கோரிக்கை விடுத்தார்.

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 10-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன.

இருதரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே, தங்கள் வான்பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கக் கோரி நேட்டோ அமைப்பிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி (Zelenskyy) கோரிக்கை விடுத்தார்.

உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்கத் தடை என நேட்டோ அறிவித்தால் பயணிகள் விமானம், சரக்கு விமானம், போர் விமானம் என எவ்வித விமானங்களும் உக்ரைன் வான்பரப்பில் பறக்கக் கூடாது.

இது ரஷிய போர் விமானங்கள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதை தடுக்க உதவும். தடையை மீறும் எந்த விமானங்களையும் நேட்டோ படைகள் சுட்டுவீழ்த்தலாம். ஆனால், உக்ரைன் அதிபர் விடுத்த கோரிக்கையை நேட்டோ அமைப்பு நிராகரித்துள்ளது.

இந்நிலையில், தாங்கள் விடுத்த கோரிக்கையை நிராகரித்த நேட்டோ அமைப்புக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி (Zelenskyy) கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உக்ரைன் அதிபர் விளோடிமர் செலன்ஸ்கி (Zelenskyy) வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “நேட்டோ கூட்டமைப்பு பலவீனமான மற்றும் குழப்பமானது. "இன்று முதல் இறக்கும் மக்கள் அனைவரும் உங்களால் இறந்துவிடுவார்கள்.

உங்கள் பலவீனம் மற்றும் தொடர்பின்மை காரணமாக இது நடக்கப்போகிறது உக்ரைன் நகரம் மீதும் கிராமங்கள் மீது மேலும் தாக்குதல் நடத்துவதற்கான பச்சைக்கொடியை நேட்டா தலைமை வழங்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US