உலக நாடுகளுக்கு ஐநா பொதுச்சபை தலைவர் வெளியிட்டுள்ள டுவிட்!

Shankar
Report this article
உலகம் இந்தியாவிற்கு உதவ வேண்டிய நேரம் இது என்று ஐநா பொதுச்சபை தலைவர் வால்கன் போஸ்கிர் (Volkan Boskir) தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 23 ஆயிரத்து 144 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 76 லட்சத்து 36 ஆயிரத்து 307 ஆக உள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 28 லட்சத்து 82 ஆயிரத்து 204 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
I’m worried about the #COVID19 situation in India, a country which did so much to ensure #Vaccines4All in vulnerable countries. It’s time for the world to extend aid & support to India.
— Volkan BOZKIR (@volkan_bozkir) April 27, 2021
No one’s safe until we’re all safe.
My thoughts are with #India & the Indian people. ?????
வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. பல்வேறு வெளிநாடுகளும் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
இந்நிலையில், உலகம் இந்தியாவிற்கு உதவ நேரம் வந்துவிட்டதாக ஐ.நா. சபை 75-வது கூட்டத்தொடரின் தலைவர் வால்கன் போஸ்கிர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
மிகவும் நளிவடைந்த நாடுகளில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு பல்வேறு உதவிகள் செய்த இந்தியாவில் தற்போதைய கொரோனா சூழ்நிலையால் நான் மிகுந்த கவலை அடைந்துள்ளேன்.
உலகம் இந்தியாவுக்கு நிவாரணம் மற்றும் உதவ வேண்டிய நேரம் இது. நாம் அனைவரும் பாதுகாப்பாக இல்லாதவரை யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது. எனது எண்ணங்கள் இந்தியாவுடனும், இந்திய மக்களுடனும் உள்ளது’ என தெரிவித்துள்ளார்.