காசாவிற்கு உதவியை அனுமதிக்க இஸ்ரேல் கடமைப்பட்டுள்ளதாக ஐ.நா. உயர் நீதிமன்றம் அறிவிப்பு
காசாவுக்குள் ஐ.நா உதவியை அனுமதிக்க இஸ்ரேல் கடமைப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பலஸ்தீன குடிமக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் நிறுவனங்களால் காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க இஸ்ரேல் கடமைப்பட்டுள்ளது என்று சர்வதேச நீதிமன்றம் கூறியுள்ளது.
பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம் நடுநிலைமை வகிக்கவில்லை என்றோ அல்லது அதன் ஊழியர்களில் கணிசமான எண்ணிக்கையிலானவர்கள் ஹமாஸ் அல்லது பிற ஆயுதக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்றோ இஸ்ரேல் குறிப்பிட்டாலும் அந்த கூற்றுக்களை இஸ்ரேல் உறுதிப்படுத்தவில்லை என்று ஐ.நா.வின் உயர் நீதிமன்றத்தின் ஆலோசனைக் குழு கருத்து தெரிவித்துள்ளது.