பாகிஸ்தான் தாக்குதலுக்கு ஐநா கடும் கண்டனம்
கடந்த வாரம் பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ஷியா பிரிவு மசூதி ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலுக்கு ஐ.நா கடும் கண்டன,ம் வெளியிட்டுள்ளது.
பயங்கரவாதிகள் நிகழ்த்திய இந்த தற்கொலைப்படை தாக்குதலில், மசூதிக்கு தொழுகை நடத்த வந்த அப்பாவி பொதுமக்கள் 63 பேர் கொல்லப்பட்டதுடன் 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
பாகிஸ்தானை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில் பெஷாவர் தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் தலைவர் லனா ஜாகி நஸிசிபே வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ பெஷாவர் மசூதியில் நடைபெற்ற கொடூரமான மற்றும் கோழைத்தனமான தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவிக்கிறது.
இந்த தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவதை அவசியம்” என அவர் தெரிவித்துள்ளார்.