உக்ரைனில் பலியானவர்களின் சரியான எண்ணிக்கை வெளியிடப்படும்: அறிவித்த ஐநா
உக்ரைனில் பலியானவர்கள் குறித்த சரியான எண்ணிக்கையை வெளியிட இருப்பதாக ஐக்கிய நாடுகள் மன்றம் அறிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடர்ந்து 45 நாட்களைத் தாண்டி நடைபெற்று வகிறது. இந்தப் போரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்கள், இருதரப்பு இராணுவ வீரர்கள் ஆகியோர் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
உக்ரைன் தரப்பில் மொத்தம் 19,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். ஆனால் ரஷ்ய தரப்பு, அதை முற்றாக மறுத்துள்ளதுடன், பேரிழப்பு ஏற்பட்டுள்ளது உண்மைதான் என மட்டும் குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து ஐநா மனித உரிமை ஆணையம் இது குறித்து ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. விரைவில் தங்கள் அமைப்பு உக்ரைனில் நடந்த போரில் மரணம் அடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை வெளியிடுவோம் என்று தெரிவித்துள்ளது.
மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை குறித்து ரஷ்யா-உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் அளிக்கும் எண்ணிக்கையை காட்டிலும் உண்மையான எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கக்கூடும் என்று மேற்கத்திய நாடுகளின் அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.