ஐ.நா. வின் அறிவிப்பால் அதிர்ந்துபோன உக்ரைன்
போர் மற்றும் ஆக்கிரமிப்பு என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஐநா ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக வெளியான தகவல்களுக்கு உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரி குலேபா (Dmitry Kuleba) அதிருப்தி தெரிவித்தார்.
உக்ரைனில் ராணுவ நடவடிக்கையை ரஷ்யா தொடர்ந்து ஊக்குவித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் போர், ஆக்கிரமிப்பு என்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என ஐநா அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது என்பதால், உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பதட்டமான சூழ்நிலையைப் பற்றி விவாதிக்கும் போது அல்லது கருத்து தெரிவிக்கும் போது ஐ.நா ஊழியர்கள் போர் மற்றும் ஆக்கிரமிப்பு என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும், அதற்குப் பதிலாக ரஷ்யா-உக்ரைன் மோதல் அல்லது இராணுவத் தாக்குதல் என்ற சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.
ஐ.நா., ஊழியர்களுக்கு வார்த்தைகளை பயன்படுத்த அறிவுறுத்தி குறுஞ்செய்தி அனுப்பியதாக நேற்று பல முன்னணி செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. உக்ரைன் தேசியக் கொடியை சமூக ஊடகப் பக்கங்களில் பயன்படுத்த வேண்டாம் என அனைத்து ஐ.நா ஊழியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமித்ரோவ் குலேபா((Dmitry Kuleba) ), இந்த வார்த்தைக்கு ஐநா தணிக்கை விதித்துள்ளதை நம்புவது மிகவும் கடினம் என்றும், ஐ.நா.வின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருந்தால், ஐ.நா உடனடியாக அந்த அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதற்கிடையில், உலகளாவிய தகவல்தொடர்புகளில் ஐ.நா.வின் முன்னணி நபர்களில் ஒருவரான மெலிசா ஃப்ளெமிங்(Melissa Fleming), இது உண்மைச் செய்தி அல்ல என்று ஐ.நா.வின் அரசியல் மற்றும் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான ஐ.நா.வின் துணைப் பொதுச்செயலாளர் ரோஸ்மேரி டிகார்லோ(Rosemary Dicarlo)வின் இணையதளத்தை சுட்டிக்காட்டி பதிலளித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வார்த்தை கட்டுப்பாடு தொடர்பான குறுஞ்செய்திகள் எதுவும் அனுப்பப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
ஐ.நா.வின் அரசியல் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்பும் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் ரோஸ்மேரி டிகார்லோ(Rosemary Dicarlo), யுத்தம் பயனற்றது என்றும், போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அனைத்து நல்லெண்ண முயற்சிகளுக்கும் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் தனது இணையத்தளத்தில் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.