நைஜீரியாவில் வரலாறு காணாத உணவுப்பஞ்சம் ; ஐ.நா. எச்சரிக்கை
ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் கிளர்ச்சியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு குழுவினர் பொதுமக்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக வடக்கு நைஜீரியாவில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் அதிகரிப்பால் அங்கு உணவுத் தட்டுப்பாடு உச்சத்தை எட்டியுள்ளது.

இந்த ஆண்டிற்குள் அங்கு 3 கோடியே 50 இலட்சம் மக்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும், இதனால் வரலாறு காணாத உணவுப் பஞ்சம் எற்படக்கூடும் என்றும் ஐ.நா. உலக உணவு திட்டத்திற்கான அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அங்குள்ள வளங்கள் டிசம்பருக்குள் தீர்ந்துவிடும் என்று கூறப்படும் நிலையில், தற்போது சுமார் 60 இலட்சம் பேருக்கு குறைந்தபட்ச உணவு கூட கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக நிதி நெருக்கடியால் பல ஊட்டச்சத்து திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.