கனடாவில் குவியும் உரிமை கோரப்படாத சடலங்கள்
கனடாவின் நியூ ஃபவுண்ட்லான்ட் பகுதியில் உரிமை கோரப்படாத சடலங்களின் எண்ணிக்கை குவிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மரண சடங்குகளை மேற்கொள்வதற்கு பொருளாதார இயலுமை இல்லாதவர்கள் சடலங்களை கைவிட்டு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் போதிய அளவு உதவியின்றி சிலரால் தங்களது நேசத்திற்குரியவர்களின் இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மாகாணத்தின் மிகப்பெரிய வைத்தியசாலையில் பிணவறைகளில் உரிமை கூறப்படாத பல சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாகாணத்தின் அரசாங்கம் மக்களுக்கு போதிய அளவு வசதிகளை வழங்க தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் கௌரவமான முறையில் அடக்கம் செய்யப்படுவதற்கு உண்டான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் உயிரிழக்கும் சிலரது உறவினர்கள் சடலங்களை பெற்றுக்கொள்ள மீள வருவதே இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
இறுதி கிரியைகளை மேற்கொள்வதற்கு போதிய அளவில் நிதி வசதி இல்லாத காரணத்தினால் இவ்வாறு அவர்கள் சடலங்களை பொறுப்பேற்றுக் கொள்வதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதனால் வைத்தியசாலையின் பிணவறைகளில் அதிக எண்ணிக்கையிலான சடலங்கள் தேங்கி கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.