கனடாவில் கடந்த மாதம் தொழில்களை இழந்த 40000 பேர்!
கடனாவில் சுமார் 40000 பேர் கடந்த ஆகஸ்ட் மாதம் தொழில்களை இழந்துள்ளதாக நாட்டின் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதத்திற்கான தொழிலற்றவர்கள் வீதம் 5.4 வீதமாக உயர்வடைந்துள்ளது.
கடந்த ஜுலை மாதம் வேலையற்றோர் வீதம் 4.9 வீதமாக காணப்பட்டது எனவும் இது 1976ம் ஆண்டின் பின்னர் பதிவான குறைந்த வீதம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
. கல்வி மற்றும் கட்டுமானத்துறைகளில் அதிகளவு தொழில் வாய்ப்புக்கள் இழக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப துறைகளில் வேலை வாய்ப்புக்கள் கூடுதல் அளவில் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கல்வித்துறையில் சுமார் ஐம்பதாயிரம் தொழில் வாய்ப்புக்கள் இழக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் வட்டி வீதங்கள் அதிகரித்துள்ள நிலையில் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
பெண்கள் மத்தியில் வேலை வாய்ப்பு இன்மை அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.