இந்த நாட்டில் இனி வாரத்தில் 4 1/2 நாட்கள் மட்டுமே வேலை! உச்சக்கட்ட சந்தோஷத்தில் ஊழியர்கள்
அமீரகத்தில் இனி ஊழியர்களுக்கு வாரத்தில் நான்கரை நாட்கள் மட்டுமே வேலை நேரம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது ஊழியர்களை பெரும் ஆச்சர்யத்திலும் சந்தேஷத்திலும் ஆழத்தியுள்ளது.
உலக நாடுகள் பலவற்றில் சமீப காலமாக ஊழியர்களின் பணி நேரம் மற்றும் சொந்த வாழ்க்கைக்கான நேரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தொழிலாளர் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன.
அந்த வகையில் தற்போது அரபு அமீரகத்திலும் வாரத்திற்கு நான்கரை நாட்கள் வேலை என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி அமீரகம் வெளியிட்டுள்ள தகவலின்படி பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 7.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை செயல்படும் என்றும், வெள்ளிக்கிழமை மட்டும் காலை 7.30 முதல் மதியம் 12 மணி வரை செயல்படும் என்றும், சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த விதிமுறை வரும் ஜனவரி மாதம் 1-ஆம் தேதி அமலுக்கு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.