கனடாவில் தனது 87வது வயதில் பட்டம் பெற்று சாதனை படைத்த மூதாட்டி
கனடாவில் தனது 87ம் வயதில் பட்டம் பெற்று மூதாட்டியொருவர் சாதனை படைத்துள்ளார்.
87 வயதான லூயிஸ் ஃப்ரேசர் என்ற மூதாட்டியே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
“மொழியும் பண்பாடும் தொடர வேண்டும். அதற்காகவே நான் மீண்டும் படிக்கத் தொடங்கினேன்,” என பெருமையாக ஃப்ரசர் கூறுகிறார்.
தன்னுடைய பிறமொழியான "பிளெயின்ஸ் க்ரீ" (Plains Cree) மொழியை காப்பது என்ற ஆர்வம், இன்று பலனளித்துள்ளது என தெரிவித்துள்◌ாளர்.
சாஸ்கச்சுவான் பல்கலைக்கழகத்தின் Indian Teacher Education Program (ITEP) இல், இவரே இந்த ஆண்டு பட்டம் பெற்ற மூத்த மாணவியாக இருக்கிறார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக ஆசிரியராக மாறும் கனவின் பின் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருந்தார்.
தன்னால் இன்னும் நம்ப முடியவில்லை. கையில் பட்டம் கிடைக்கும் வரை நிஜமா என்பது உணர முடியவில்லை,” என இந்த பெருமிதமான தருணத்தில் ஃப்ரேசர் தெரிவித்தார்.