விமானப் பயணிகளுக்கான விசேட அறிவிப்பு
விமான பயணிகளுக்கு, ஸ்ரீலங்கா விமான சேவை நிறுவனம் விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு செல்லும் முன் தங்களது விமானங்களின் அண்மைய நிலையை சரிபார்க்க வேண்டும் என ஸ்ரீலங்கா விமான சேவை நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக இந்த விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளுது. பயணிகள் தங்களது விமானப் பயணங்கள் தொடர்பிலான தகவல்களை பின்வரும் வழிகளில் அறிந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

• www.srilankan.com •
இலங்கையின் உள்நாட்டில் இருந்து: 1979
• சர்வதேச அழைப்புகளுக்கு: +94 117 771979 இதேவேளை, கடும் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக வருகை மற்றும் புறப்படும் விமானங்கள் தாமதமடைவதாக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
மோசமான வானிநிலை காரணமாக பல விமானங்கள் கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் மட்டளைக்கு மாற்றி விடப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயணிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.