கனடாவில் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுமி; வெளியான திடுக் தகவல்
கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Quadeville என்னுமிடத்தில், கடந்த மாதம், அதாவது, ஜூன் மாதம் 23ஆம் திகதி எட்டு வயது சிறுமி ஒருத்தி காணாமல் போனாள்.
மறுநாள், அதாவது, 24ஆம் திகதி, நள்ளிரவு அவள் கண்டுபிடிக்கப்பட்டாள்.
பொலிசார் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், இன்னமும் அவள் மருத்துவமனையில்தான் இருக்கிறாள்.
முதலில், அவளை ஏதோ காட்டு மிருகம் தாக்கியிருக்கலாம் என பொலிசார் நினைத்துள்ளார்கள்.
இந்நிலையில், அவளது உடலில் இருக்கும் காயங்களிலிருந்து எந்த விலங்கின் DNAவும் கிடைக்கவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
தற்போது, இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக பொலிசார் கிழக்கு ஒன்ராறியோவைச் சேர்ந்த 17 வயதுப் பையன் ஒருவனைக் கைது செய்துள்ளார்கள்.
அவன் மீது, அந்தச் சிறுமியை கொலை செய்ய முயன்றது மற்றும் சீரழித்தது தொடர்பில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
புதன்கிழமை அவன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளான்..
அந்தப் பையன் 18 வயதுக்குக் குறைவான வயதுடையவன் என்பதால், அவன் யார், அவனுக்கும் அந்த சிறுமிக்கும் என்ன உறவு என்பது போன்ற எந்த விவரமும் வெளியிடப்படவில்லை.