கரீபியன் கடல் செல்லும் அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல்

Donald Trump United States of America Ship Drugs
By Sahana Oct 25, 2025 09:45 PM GMT
Report

லத்தீன் அமெரிக்காவில் இருந்து தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களைக் கடத்தும் கும்பல்களுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் மிகப் பெரிய விமானந்தாங்கிக் கப்பல் கரீபியன் கடல் பகுதிக்கு அனுப்படவுள்ளது.

இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை தலைமையகமான பென்டகன் பிறப்பித்துள்ள ஆணையில், யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆா். ஃபோா்ட் விமானந்தாங்கிக் கப்பலை கரீபியன் கடல் பகுதிக்குக் கொண்டு அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கரீபியன் கடல் செல்லும் அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல் | Us Aircraft Carrier Sailing To The Caribbean Sea

ஏற்கெனவே, போதைப் பொருள்களைக் கடத்திவருவதாகக் கூறி, கரீபியன் கடல் வழியாக வந்துகொண்டிருந்த 10 படகுகளை அமெரிக்கா தாக்கி அழித்தது. இதில் பலா் உயிரிழந்தனா்.

இத்தகைய தாக்குதல்களால் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் அமெரிக்காவும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கரீபியன் கடல் பகுதியில் சக்திவாய்ந்த விமானந்தாங்கிக் கப்பலை அமெரிக்கா அனுப்பியுள்ளது அந்தப் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இதுவரை கடலில் படகுகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்திவந்த அமெரிக்க படையினா், விமானந்தாங்கிக் கப்பலைப் பயன்படுத்தி, லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள தரை இலக்குகளைக் குறிவைத்தும் தாக்குதல் நடத்தவிருப்பதாகக் கூறப்படுகிறது.

அதுதான் தனது அடுத்தக்கட்ட திட்டம் என்று டிரம்ப்பும் கூறியுள்ளாா். கரீபியன் கடல் பகுதிக்கு ஜெரால்ட் ஆா். ஃபோா்ட் அனுப்பப்படுவது, அந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா இதுவரை செய்திராத அதிகபட்ச படை குவிப்பு என்று கூறப்படுகிறது.

ஏற்கெனவே அந்தக் கடல் பகுதியில் படகுகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியிருந்தாலும், ரேடாா் கண்காணிப்பில் சிக்காத 10 எஃப்-35 ரக போா் விமானங்களுடன், எட்டு போா்க் கப்பல்கள் புடைசூழ ஜெரால்ட் ஆா். ஃபோா்ட் விமானந்தாங்கிக் கப்பல் அந்தப் பகுதியில் நிறுத்தப்படுவது வெனிசுலா போன்ற நாடுகளில் அதிா்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கரீபியன் கடல் செல்லும் அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல் | Us Aircraft Carrier Sailing To The Caribbean Sea

ஏற்கெனவே, வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மடூரோவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான ரகசிய வேலைகளில் ஈடுபட தங்களின் சிஐஏ உளவு அமைப்புக்கு உத்தரவிட்டதாக டிரம்ப் கூறியுள்ளாா்.

இந்தச் சூழலில், வெனிசுலாவுக்கு பக்கத்தில் இவ்வளவு வலிமையான அமெரிக்க படைகள் குவிக்கப்படுவது அந்த நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மடூரோ விமா்சனம்: கரீபியன் கடலுக்கு விமானந்தாங்கிக் கப்பல் அனுப்பும் அமெரிக்காவின் முடிவை நிக்கோலஸ் மடூரோ விமா்சித்துள்ளாா்.

இது குறித்து அவா் கூறியதாவது,

இனிமேல் எந்தவொரு போரிலும் எப்போதுமே ஈடுபடப் போவதில்லை என்று அமெரிக்கா உறுதியளித்தது.

அனால் அதற்குப் பதிலாக, கரீபியன் கடலுக்கு விமானந்தாங்கிக் கப்பல் அனுப்பவதன் மூலம் பிராந்தியத்தில் ஒரு புதிய, நிரந்தர போரை அந்த நாடு உருவாக்குகிறது. அதை நாங்கள் தடுப்போம் என்றாா்.

மரண அறிவித்தல்

கட்டுவன், Bondy, France

06 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US