ஒப்புதல் அளித்த அமெரிக்கா... ஈரான் - இஸ்ரேல் இடையே போர் பதற்றம் தணிய போகிறதா?
இஸ்ரேல் - ஈரான் இடையே சில வாரங்களாகவே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் போருக்கான பதற்ற நிலை நீடித்து வருகின்றது.
இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே, போர் மூள்வதற்கான சூழல் காணப்படும் சூழலில், இது 3-வது உலக போருக்கு வழிவகுக்குமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேலின் 'அயர்ன் டோம்' (Iron Dome) வான் பாதுகாப்பு அமைப்பு உள்பட, இஸ்ரேல் ராணுவத்தின் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அமெரிக்க அரசு இஸ்ரேல் நாட்டிற்கு 13 பில்லியன் மதிப்பிலான ராணுவ உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதனை வரவேற்றுள்ளார். அமெரிக்காவின் இந்த ராணுவ உதவியால் தற்போது இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் பதற்றம் தணிவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.