ஏமன் விமான நிலையம் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா
ஏமன் விமான நிலையம் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் , போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு ஆதரவு அளித்து வருகிறது.
மேலும், செங்கடல் வழியாக இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கு செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
தாக்குதலுக்கு பதிலடி
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளை குறிவைத்து அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையம் மீது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து இன்று வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
ஏமனின் ஹூடைடா நகரில் உள்ள விமான நிலையம் மீது இந்த வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோல், ஏமனின் கமரன் தீவு மீதும் அமெரிக்கா, இங்கிலாந்து இணைந்து வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.
அதேவேளை முன்னதாக, இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 21 ஆம் திக தி ஏமனின் ஹூடைடா துறைமுகம் மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.