நாய்களுக்கு தடை விதித்த அமெரிக்கா
பல்வேறு நாடுகளில் இருந்து நாய்களை கொண்டுவர அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. ரேபிஸ் நோய் அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து நாய்களை கொண்டுவர அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.
நாய் வெறி நோயான ரேபிஸ் இன்னும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பிரச்சினையாக உள்ளது. குறித்த நாடுகளில் இருந்து நாய்களை கொண்டுவருவதற்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.
ஏற்கெனவே இந்த நாடுகளில் இருந்து எடுத்துவரப்படும் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போட்ட சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும், தடுப்பூசி போடும் அளவுக்கு வளராத சில குட்டி நாய்கள் எடுத்துவரப்படும் நிலையில் இந்த குட்டி நாய்களுக்கும் அமெரிக்காவுக்குள் அழைத்துவர அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
எனினும் அண்மைக்காலமாக இதுபோல குட்டி நாய்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில் நேற்று முதல் இந்த தடை அமலுக்கு வந்துள்ளது.
இதேவேளை இந்த தடைக்கு அமெரிக்க கால்நடை மருத்துவ சங்கம் வரவேற்பளித்துள்ளது.