50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அமெரிக்க டொலர் சரிவு
கடந்த 1973ஆம் ஆண்டு அமெரிக்க டொலரின் விலை சரிவை கண்ட பின்னர் தற்போது மீண்டும் சரிவை சந்தித்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் பொருளாதார கொள்கைகள்தான் டொலரின் சரிவிற்கு காரணம் எனவும் நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்ற நாடுகளுடன் வர்த்தகத்தில் கடுமையான வரிகளை விதித்ததும், உலக விடயங்களில் இருந்து தனிமைப்படுத்தும் கொள்கைகளை பின்பற்றியதுமே டொலர் சரிவுக்கு காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவை தவிர அமெரிக்க அரசாங்கத்தின் கடன் அதிகரிப்பு ஆகியவையும் டொலரின் மதிப்பை மேலும் பாதித்துள்ளன. இது வெளிநாட்டினரை அமெரிக்காவில் முதலீடு செய்ய தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரம்பின் நிர்வாகத்தின் பொருளாதார கொள்கை வரிகள் அதிகமாக்கப்பட்டதால், பணவீக்கம் உச்சத்தை தொட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.