இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் விடுத்த எச்சரிக்கை!
மே முதலாம் திகதியான நாளை கொழும்பிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பல ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதார நிலைமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில் இந்த ஆர்ப்பாட்டங்கள் கொழும்பிற்கு பயணித்தல், கொழும்பில் இருந்து பயணித்தல், கொழும்பிற்குள் பயணித்தல் போன்ற அனைத்தையும் ஏனைய பயணங்களை மிகவும் கடினமாக்கும் என தூதரகம் எச்சரித்துள்ளது.
அத்துடன் நாள் முழுவதும் வீதி மூடல் மற்றும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது. சில ஆர்ப்பாட்டங்கள் பற்றி அமெரிக்க தூதரகம் அறிந்திருப்பதாகவும், ஆனால் இலங்கை முழுவதும் மேலதிக போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தூதரகம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம் அமைதியான முறையில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் கூட மோதலாக மாறி வன்முறையாக மாறக்கூடும் என்றும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது.