ஒன்டாரியோ அரசாங்கத்தை விமர்சனம் செய்த அமெரிக்கத் தூதுவர்
ஒன்டாரியோ மாகாண அரசாங்கத்தின் செயற்பாடுகளை கனடாவிற்கான அமெரிக்கத் தூதுவர் பீட் ஹூக்ஸ்ட்ரா மீண்டும் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளார்.
ஒன்டாரியோ அரசு வெளியிட்ட அரசியல் விளம்பரம் அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டு சென்றதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஒட்டாவாவில் நடைபெற்ற தேசிய உற்பத்தி மாநாட்டில் ஹூக்ஸ்ட்ரா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தின் தாக்கத்தை கனடா “சரியாகப் புரிந்துகொள்ளவில்லை” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கத் தேர்தலுக்கு முன்னதாக, ஒன்டாரியோ அரசு நிதியுதவி வழங்கிய அந்த விளம்பரம் முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனின் குரல் பயன்படுத்தப்பட்டதுடன், ட்ரம்ப் அரசின் சுங்கக் கொள்கைகளை விமர்சித்தது. இந்த விளம்பரம் அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் மற்றும் சுங்கக் கட்டணங்களின் சட்டபூர்வத்தன்மை குறித்து உச்சநீதிமன்ற விசாரணைக்கு முன் ஒளிப்பரப்பப்பட்டது.
இந்த நடவடிக்க ஒன்டாரியோ மாகாண அரசு செயல் என்றாலும், அமெரிக்க பார்வையில் இது கனடாவின் செயலாகவே பார்க்கப்படுகிறது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாங்கள் அதை மாகாணம், மத்திய அரசு என்று பிரித்து பார்க்கவில்லை. அரசாங்க நிதியுடன் அமெரிக்காவில் அரசியல் விளம்பரம் செய்வது — அதற்குக் கண்டிப்பாக விளைவுகள் இருக்கும் என தெரிவித்துள்ளார்.