மீறினால் அவ்வளவுதான் ; ஈரானுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை
ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் வணிகக் கப்பல்கள் மீது இனி தாக்குதல் நடத்தக் கூடாதென ஈரான் அறிக்கை வெளியிட வேண்டும் என அமெரிக்கா இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தவறும் பட்சத்தில், ஈரான் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி முதல் 3 மாதங்களுக்கும் மேலாக நீடித்த போர், , ஜூன் 18ஆம் திகதி தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில்,அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஸ்கியான் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.
இதையடுத்து கடந்த 20 நாட்களாக அமைதி நிலவி வந்த நிலையில், இம்மாதம் 7ஆம் திகதி ஹோர்முஸ் நீரிணையில் மூன்று வணிகக் கப்பல்கள் மீது திடீரென ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானுடனான இடைக்கால அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில், இரு நாடுகளுக்குமிடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.