விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த 430 பில்லியன் டொலர்: சாதித்த ஜோ பைடன்
அமெரிக்காவில் விலைவாசி உயர்வு, காலநிலை மாற்றம் மற்றும் அதிகரிக்கும் அத்தியாவசிய மருந்துகளுக்கான செலவு உள்ளிட்டவையை கட்டுப்படுத்த 430 பில்லியன் டொலர் தொகைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தின் இந்த கோரிக்கைக்கு ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளனர்.
இந்த நிலையில், இது கொண்டாட வேண்டிய தருணம், நமது முக்கியமான கொள்கையில் மற்றொரு மாபெரும் அடியை எடுத்து வைத்திருக்கிறோம் என்று சபாநாயகர் நான்சி பெலோசி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜோ பைடன் நிர்வாகத்தின் இந்த சிறப்பு மசோதாவுக்கு ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவளிக்க, குடியரசுக் கட்சியினர் மொத்தமாக புறக்கணித்துள்ளனர்.
ஒதுக்கப்படும் இந்த மாபெரும் தொகையில் பெரும்பகுதி காலநிலை மாற்றத்திற்கு செலவிடப்படும்.
மட்டுமின்றி, காற்றாலை, சூரிய மின்சக்தி, பயோ கேஸ் மற்றும் ஹைட்ரஜன் உள்ளிட்ட சுத்தமான எரிசக்திக்கு குறைந்தபட்சம் பத்தாண்டுகளுக்கு பெடரல் அரசு மானியங்களை வழங்க இந்த மசோதாவில் வழி செய்யப்படும்.