அமெரிக்காவில் இராணுவ வீரா்களின் குடும்பத்தினருக்கு நேர்ந்த கதி ; பலர் கைது
அமெரிக்காவில் தற்போது பணியில் உள்ள ராணுவ வீரா்களின் பெற்றோா் மற்றும் வாழ்க்கைத்துணைகள் 50-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிா்வாகத்தின் தீவிர குடியேற்றக் கொள்கையின்ஒரு பகுதியாக, அந்நாட்டில் பல்லாண்டுகளாக ராணுவ வீரா்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த குடியேற்றப் பாதுகாப்புகளை ரத்து செய்து, இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ட்ரம்ப் 2-ஆவது முறையாக அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு கைது செய்யப்பட்டவா்களில் குறைந்தது 6 போ் ஏற்கெனவே அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனா்.
மேலும் 8 போ் தற்போது மத்திய குடியேற்றக் காவல்துறையின் காவலில் உள்ளனா்.
ஈரானுடன் போா் பதற்றம் நிலவும் தற்போதைய சூழலில், குடும்பத்தினரின் கைது நடவடிக்கை ராணுவ வீரா்களின் மனவுறுதியையும் பணித் திறனையும் கடுமையாகப் பாதிக்கும் என நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.
அதேநேரம், ராணுவத்தில் சேருவதற்கான விளம்பரங்களில் வீரா்களின் குடும்பத்தினருக்கான குடியேற்றச் சலுகைகள் தொடா்ந்து முன்னிலைப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.