கடும் எதிர்ப்பில் அமெரிக்கா; இந்தியாவுக்கு ரஷ்யா கூறிய மகிழ்ச்சி தகவல்
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீதம் வரி விதித்தது. அதோடு மட்டுமல்லாமல் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் கூடுதலாக 25 சதவீத வரி விதித்தது.
மொத்தமாக 50 சதவீத வரி விதித்துள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது.
அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயந்து, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை. இந்த நிலையில், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் மேலும் தள்ளுபடி விலையில் விற்க ரஷ்யா முன் வந்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் மூலமாக கிடைக்கும் பணத்தை, உக்ரைனுக்கு எதிராக போரிட ரஷியா ஆயுதங்கள் வாங்க பயன்படுத்துவதாக அமெரிக்க குற்றம்சாட்டி வருகிறது.
ரஷ்யா- உக்ரைன் போர் தொடங்கிய பின்னர், ரஷியாவில் இருந்து மிகப்பெரிய அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளது எனவும் அமெரிக்கா விமர்சனம் செய்து வருகிறது.