சீன ஜனாதிபதியுடன் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உரையாடல்
நேற்று (19) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி சி ஜின்பிங் இடையே நடந்த தொலைபேசி உரையாடலில் டிக்டொக் பயன்பாட்டின் எதிர்காலம் உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்களைப் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த அழைப்பு, ஜூன் மாதத்திற்குப் பின் இருவருக்கும் இடையேயான முதல் உரையாடலாகும்; டிரம்ப் "டிக்டொக் ஒப்பந்தத்தின் ஒப்புதல்" குறித்து முன்னேற்றம் கண்டதாக இந்த உரையாடலை தொடர்ந்து கூறினார்.
வர்த்தகத் தடை
இருப்பினும், இன்றைய உரையாடலில் டிக்டொக் ஒப்பந்தத்திற்கு இறுதி ஒப்புதல் கிடைக்கவில்லை என்று வெள்ளை மாளிகை அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சீன அரசு இந்த உரையாடலை "நடைமுறை, நேர்மறையான மற்றும் கட்டமைப்பு ரீதியானது" என வர்ணித்துள்ளது.
இரு தலைவர்களும் வர்த்தகப் போர், அமெரிக்காவின் ஒற்றைத் தரப்பு வர்த்தகத் தடைகள், ரஷ்யா-உக்ரைன் போர் போன்றவற்றைப் பற்றியும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, சி ஜின்பிங் வர்த்தகத் தடைகளைத் தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
நவம்பர் மாதம் தென்கொரியாவில் நடைபெறும் ஆசியா-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மன்றத்தில் முகாமுகம் சந்திப்பதாகவும், அடுத்த ஆண்டு சீனாவில் சந்திப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.