அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்... கருத்து கணிப்பில் டிரம்பை முந்தும் கமலா ஹாரிஸ்!
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடபெறவுள்ளது.
இந்த நிலையில், குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜனநாயக கட்சியில் கமலா ஹாரிஸுக்கு பெரிய அளவில் எதிர்ப்புகள் இல்லாததால் விரைவில் அவரும் ஜனாதிபதி வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் டிரம்பை விட கமலா ஹாரிஸுக்கு ஆதரவு சற்று அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தக் கருத்துக் கணிப்பில், கமலா ஹாரிஸுக்கு 44 சதவீதம் பேரும் டிரம்புக்கு 42 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்தனா்.
அதாவது, டிரம்பை விட கமலா ஹாரிஸ் கூடுதலாக 2 சதவீத ஆதரவை பெற்றுள்ளார்.