டிரம்பை நினைத்தாலே எனக்கு பயமாக இருக்கிறது... கமலா ஹாரிஸ் வெளியிட்ட கருத்து!
அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார்.
அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களம் இறங்கியுள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்க துணை ஜானதிபதியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாடியபோது,
டொனால்டு டிரம்ப் அதிபராக வெற்றி பெற்று வெள்ளை மாளிகைக்கு மீண்டும் திரும்புவார் என்று நினைத்தாலே எனக்கு பயமாக இருக்கிறது. இதனால்தான் நான் நாடு முழுவதும் பயணம் செய்து பிரசாரம் செய்கிறேன்.
டிரம்ப் அதிபராவது பற்றி நாம் அனைவரும் பயப்பட வேண்டும். நாம் பயப்படும்போது அதற்கு எதிராக நாம் போராட வேண்டும்.
நம் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து பயப்படும்போது, நாம் இழுத்து போர்த்திக்கொண்டு படுத்திருப்போமா? இல்லை. நம்மால் முடியாது. ஜனநாயக கட்சியினரை மீண்டும் போராட அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு கமலா ஹாரிஸ் பேசினார்.