பாடசாலை மாணவர்களுடன் தகாத உறவு ; அமெரிக்க ஆசிரியைக்கு 30 ஆண்டுகள் சிறை
அமெரிக்காவைச் சேர்ந்த 36 வயதான ஜாக்குலின் மா, சான் டியாகோவில் உள்ள லிங்கன் ஏக்கர்ஸ் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.
அதே பள்ளியில் படித்துக்கொண்டிருந்த 12 வயது மாணவனுடன் சுமார் 10 மாதங்களாக அவர் உறவு வைத்துள்ளார்.
காதல் கடிதங்கள்
சிறுவனுக்குக் காதல் கடிதங்கள் அனுப்புவது, தொலைப்பேசியில் அரட்டை அடிப்பது, சாட்டிங் செய்வது என ஆசிரியை ஜாக்குலின் இருந்துள்ளார்
அந்த காதல் கடிதங்களையும், சாட்டிங் குறுஞ்செய்திகளையும் பார்த்து சந்தேகமடைந்த பையனின் தாய் போலீசில் புகார் அளித்தார். அதன்படி ஜாக்குலின் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணையில் பரபரப்பு விஷயங்கள் தெரிய வந்தன. ஜாக்குலின் மா அந்தப் பையனுடன் மட்டுமல்ல, மற்ற சில மாணவர்களுடன் உறவு வைத்திருந்தது தெரியவந்தது.
அவர்களுக்கு பரிசுகள், உணவு மற்றும் சிறப்பு கவனம் கொடுத்து அவர்களின் வீட்டுப்பாடம் முதற்கொண்டு செய்துகொடுத்து தனது வலையில் அவர்களை வீழ்த்தியுள்ளார் ஜாக்குலின்.
இந்நிலையில் தற்போது நீதிமன்றத்தில் ஜாக்குலின் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.