வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட அமெரிக்கா- இங்கிலாந்து
அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் இங்கிலாந்து கார்கள் மீதான வரிகளைக் குறைப்பதற்கான நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
இது கடந்த மாதம் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்புக் கொள்ளப்பட்ட கட்டண ஒப்பந்தத்தின் சில பகுதிகளை நடைமுறைக்குக் கொண்டுவரும்.
கனடாவில் நடந்த G7 உச்சி மாநாட்டில் பேசிய இங்கிலாந்து பிரதமர் சர் கீர் ஸ்டார்மர், இந்த நடவடிக்கையை இரு நாடுகளுக்கும் “மிக முக்கியமான நாள்” என்று அழைத்தார்.
ட்ரம்பின் வரிகளின் தாக்கத்திலிருந்து பிரிட்டிஸ் வணிகங்களைப் பாதுகாக்கும் என்று இங்கிலாந்து அரசாங்கம் நம்பும் ஒப்பந்தத்தின் சில பகுதிகளை செயல்படுத்த பல வாரங்களாகப் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இது வருகிறது.
ஆனால், இந்த ஒப்பந்தத்தில் கார்கள் உட்பட பெரும்பாலான இங்கிலாந்து பொருட்களுக்கு 10% வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் எஃகு இறக்குமதிகள் மீதான கட்டணங்களை நீக்குவது குறித்து எதிர்பார்க்கப்படவில்லை.
கடந்த மாதம் ஆரம்பத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட மேற்கண்ட ஒப்பந்தம், இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவிற்குள் நுழையும் பல்வேறு பொருட்களுக்கு பரந்த அளவிலான வரிகளை விதித்த பின்னர் வெள்ளை மாளிகை அறிவித்த முதல் ஒப்பந்தமாகும்.
மத்திய கிழக்கின் நிலைமை காரணமாக ட்ரம்ப் உச்சிமாநாட்டிலிருந்து விரவைாக வெளியேறுவார் என்று வெள்ளை மாளிகை கூறியதற்கு சற்று முன்பு இது கையெழுத்தானது.