பல வருடங்களாக இறந்த தந்த கணவரின் சாம்பலை உண்ணும் மனைவி! அமெரிக்காவில் விசித்திர பெண்
அமெரிக்காவில் இறந்து போன தந்த கணவரின் சாம்பலை பல வருடங்களாக சாப்பிட்டு வரும் ஒரு பெண் தொடர்பான தகவல் மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
இங்கிலாந்தில் வசிக்கும் அந்த பெண்ணின் கணவர் 2011ம் வருடம் ஆஸ்துமா நோயால் மரணம் அடைந்தார். அவரின் சாம்பலை வீட்டில் வைத்திருந்தார் அவரின் மனைவி.

ஒருநாள் எதேச்சையாக அந்த சாம்பலில் கைவிரல் பட்டுவிட அதை தொடைக்க விரும்பாத அவர் வாயில் வைத்து சுவைத்து பார்த்திருக்கிறார்.
தன் கணவரே தன்னுடன் இருப்பது போல உணர்ந்த அந்த பெண் தினமும் ஐந்து முறைக்கு மேல் அந்த சாம்பலை சாப்பிட்டு வந்திருக்கிறார்.
நாளடைவில் சாம்பலின் சுவைக்கு அவர் அடிமையாக மாறிவிட்டார். சுமார் 5 பவுண்ட் எடை வரை தனது கணவனின் சாம்பலை சாப்பிடுவதாக கூறி திகில் கிளப்பியிருக்கிறார் அந்த பெண். தற்போது அந்த பெண்ணுக்கு மருத்துவ மற்றும் மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.