சிறார்கள் உட்பட ஒரே குடும்பத்தின் 8 பேர்: பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் 5 சிறார்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர்கள் துப்பாக்கி குண்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த கோர சம்பவம் ஏனோக் நகரத்தின் ஒருபகுதியை மொத்தமாக உலுக்கியுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். அந்த குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியாமல் நீண்ட பல மணி நேரங்களாக முயற்சித்த உறவினர் ஒருவர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
இதனையடுத்து, நலம் விசாரிக்க சென்ற பொலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த குடியிருப்பில் மூன்று பெரியவர்களும் ஐந்து சிறுவர்களும் துப்பாக்கி குண்டு காயங்களுடன் சடலமாக காணப்பட்டனர்.
இந்த விவகாரம் அப்பகுதி மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்க வாய்ப்பில்லை எனவும், ஆனால் உண்மையான குற்றவாளி தப்பியதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை மொத்தமாக உலுக்கியுள்ளது. சிறப்பு விசாரணை அதிகாரிகள் குழு தற்போது சம்பவம் நடந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதுடன், விசாரணையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு தொடர்பில் உண்மையான பின்னணி வெளிவர சில நாட்களுக்கு மேலாகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பலருக்கும் அறிமுகமான குடும்பம் இதுவென குறிப்பிட்டுள்ள நகரத்தின் முதன்மை அதிகாரி ஒருவர், இங்குள்ள மொத்த குடும்பத்தினருக்கும் இது ஒரு துயரமான தினம் என குறிப்பிட்டுள்ளார்.