வெள்ளை வேனில் 2 டசின் பேர்களுடன் கைதான கனேடிய சாரதி
ரொறன்ரோவில் இரண்டு டசின் பேர்களுடன் பயணப்பட்ட வெள்ளை வேன் சாரதியை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த வாகனத்திற்கு உரிய உரிமம் இல்லை எனவும், பின்பற்ற வேண்டிய அனைத்து விதிமுறைகளையும் அந்த வேன் சாரதி மீறியுள்ளதாகவும் ஒன்ராறியோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கைதான அந்த சாரதி மீது 25க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை கலிடன் கிராமத்தின் வழியாக பயணம் மேற்கொண்ட அந்த வாகனத்தை ரொறன்ரோ பொலிசார் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
Remember the vans stopped yesterday? WE DO! Same driver, new van, different day. Overloaded, improper license, no seatbelts, no insurance, & more! This 1 driver has been stopped 3 times and is facing over 25 charges. Some people never learn. #noexcuses #drivesafe #CaledonOPP ^im pic.twitter.com/BxHxqoQgi6
— OPP Central Region (@OPP_CR) May 3, 2023
அதில் 16 பயணிகள் காணப்பட்டதாகவும், அது பதிவு செய்யப்படாத வணிக ரீதியாக பயன்படுத்தப்பட்ட வாகனம் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த அளவுக்கு பயணிகளை ஏற்றிச் செல்ல தேவையான பேருந்து உரிமம் தேவை என்பதை அறியாத சாரதி எனவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், தொடர்புடைய பயணிகளை அழைத்துச் செல்ல வந்த இரண்டாவது வகானமும் பழுதான நிலையில் இருந்தது எனவும், பின்னர் இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை மிசிசாகா சாலையில் கூட்ட நெரிசலுடன் வாகனம் ஒன்றை அதிகாரிகள் தரப்பு மடக்கியுள்ளது.
அந்த வாகனத்தின் சாரதியும் செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தப்பட்ட சாரதியும் ஒருவர் என அறிந்த பின்னரே பொலிசார் அந்த நபரை கைது செய்துள்ளனர்.