கனடாவின் முக்கிய நகரில் அரங்கேறிய கொடூர சம்பவம்: காயங்களுடன் தப்பிய பலர்
கனடாவின் வான்கூவர் பகுதியில் நடந்த கொடூர வாள்வெட்டு சம்பவத்தில் தாக்குதல்தாரி உட்பட ஐவர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டனர்.
குறித்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பொலிசார் பெருமளவு குவிக்கப்பட்டனர். சனிக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் வாள்வெட்டு சம்பவம் அரங்கேறியதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
வான்கூவர் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் அளித்த தகவலின் நடிப்படையிலேயே பொலிசார் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர். திடீரென்று கிரான்வில் மற்றும் ஸ்மித் தெருக்களின் சந்திப்புக்கு அருகில் உள்ள ஒரு கட்டிடத்தில் ஒருவர் தனது அறைக்கு தீ வைத்தார்.
தொடர்ந்து அந்த கட்டிடத்தினுள் இருந்த நால்வரை வாளால் தாக்கியுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மட்டுமின்றி, அந்த நபர் ஆயுதத்துடன் பொலிசாரையும் எதிர்கொண்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தாக்குதல்தாரியை பொலிசார் துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய பின்னர் கைது செய்துள்ளனர்.
தாக்குதல்தாரி உட்பட ஐவரும் காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.