அமெரிக்காவில் வெனிசுலா தம்பதி மீது துப்பாகிச்சூடு; CBP ஐ கொல்ல முயன்றார்களா!
அமெரிக்காவின் ஓரிகான் மாகாணம், போர்ட்லேண்ட் நகரில் சோதனையின் போது அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படையினர் (CBP) மீது காரை ஏற்றி கொல்ல முயன்ற வெனிசுவேலா நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வெனிசுவேலா தம்பதி சர்வதேச அளவில் தேடப்படும் ஆபத்தான 'ட்ரென் டி அரகுவா' (Tren de Aragua) எனும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாலியல் தொழில் நடத்தும் கும்பலில் முக்கியப் பங்கு
வியாழக்கிழமை பிற்பகல், போர்ட்லேண்டில் ஒரு மருத்துவமனைக்கு அருகே சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றை அதிகாரிகள் மறித்தனர்.
அதன்போது காரில் இருந்த லூயிஸ் டேவிட் நிக்கோ மொன்காடா மற்றும் அவரது மனைவி ஆகியோர் காரை நிறுத்தாமல், அதிகாரிகள் மீது காரை ஏற்றி கொல்ல முயன்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தங்களை காப்பாற்ற தற்காப்பிற்காக CBP அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவரும் காயமடைந்தனர்.
அதேவேளை குறித்த வெனிசுவேலா தம்பதிகளான மொன்காடா 2022-லும், அவரது மனைவி 2023-லும் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்துள்ளதாகவும் அவர்கள் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் உள்ளன.
கைதான பெண் குறித்த பகுதியில் பாலியல் தொழில் நடத்தும் கும்பலில் முக்கியப் பங்கு வகித்ததாகவும், இதற்கு முன்னரும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடையவர் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன .