வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து: 56 பேர் உயிரிழப்பு!
வியட்நாமின் தலைநகர் ஹனோயில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் குறைந்தது 56 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 37 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டாலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
மோட்டார் சைக்கிள்கள் நிரம்பியிருந்த கட்டிடத்தின் பார்க்கிங் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
நேற்று செவ்வாய்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 11:00 மணியளவில் பலத்த இடி சத்தம் கேட்டதாகவும், பின்னர் கட்டிடத்தின் வழியாக கறுப்பு புகை எழுவதைப் பார்த்ததாகவும் குடியிருப்பாளர்கள் விவரித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்த நாட்டின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.