ஒரு வருடம் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் இராஜினாமா!
வியட்நாம் ஜனாதிபதி வோ வான் துவோங் இராஜினாமா செய்துளதாக கூறப்படும் நிலையில், அவரின் இராஜினாமாவை அந்நாட்டுப் நாடாளுமன்றம் இன்று அங்கீகரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
53 வயதான வோ வான் துவோங், ஒரு வருடகாலமே வியட்நாம் ஜனாதிபதியாக பதவி வகித்தார். நேற்று நடைபெற்ற, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டத்தின் பின்னர் ஜனாதிபதி துவோங் இராஜினாமா செய்ததாக அரசாங்கம் அறிவித்தது.
இந்நிலையில், இன்று வியாழக்கிழமை கூடிய வியட்நாம் நாடாளுமன்றம், ஜனாதிபதி துவோங்கின் இராஜினாமாவுக்கு அங்கீகாரம் வழங்கியது. அதேவேளை கட்சியின் விதிகளை துவோங் மீறியதுடன், கட்சின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் செயற்பட்டுள்ளார் என வியட்நாமின் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
எனினும், துவோங்கின் சொந்த மாநிலத்தில் ஊழல் சர்ச்சையொன்று தொடர்பாக அவர் பதவிவிலகியுள்ளார் என நம்பப்படுகிறது.
அதேவேளை வியட்நமில் . துவோங்குக்கு முன்னர் ஜனாதிபதியாக பதவி வகித்த ஜனாதிபதியும் ஊழல் சர்ச்சை காரணமாக இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்கத்கது.