இணையத்தில் விளம்பரத்தால் வெடித்த வன்முறை; பரிதாபமாக உயிரிழந்த ஐந்தறிவு ஜீவன்
அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேர்னில் 2000 டொலர் பெறுமதியான ஈ ஸ்கூட்டர் தொடர்பில் ஏற்பட்ட மோதலில் மூவர் கத்திக்குத்து இலக்காகியுள்ளதுடன் வளர்ப்பு நாய் ஒன்றும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
ஈஸ்கூட்டரினை விற்பனை செய்வதாக இணையத்தில் விளம்பரம் செய்தவர்களின் வீட்டிற்கு இருவர் அதனை கொள்வனவு செய்ய சென்ற நிலையில், அவர்கள் போலிநாணயங்களை கொடுத்து ஈஸ்கூட்டரினை கொள்வனவு செய்ய முயன்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பரிதாபமாக உயிரிழந்த வளர்ப்பு நாய்
எனினிம் அவர்கள் கொண்டுசென்ற நிலையில் ஈஸ்கூட்டர் உரிமையாளர்கள் அது போலி நாணயம் என்பதை கண்டறிந்து ஸ்கூட்டரை வழங்க மறுத்துள்ள கத்தியொன்றை காட்டி அச்சுறுத்திவிட்டு அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.
அதன் பின்னர் அவர்கள் துப்பாக்கிகள் பல கத்திகளுடன் வீட்டின் மதிலுக்கு மேலால் பாய்ந்து உள்ளே நுழைந்துள்ளனர். வீட்டின் உரிமையாளர்களை வெளியில் வருமாறு தெரிவித்து கதவை உடைக்க முயன்றதுடன் அவர்களில் ஒருவர் நாயினை கத்தியால் குத்தியுள்ளார்.
இதனையடுத்து வீட்டிலிருந்தவர்கள் வெளியே வந்து அவர்களை எதிர்கொண்டுள்ளனர். இதன்போது ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு கடும் காயம் ஏற்பட்டுள்ளதுடன் இருவர் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கத்திக்குத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பியோடிய நிலையில்
மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.