கண்ணாடி மூலம் நடந்த அதிசயம்; பார்வை குறைபாடு இருந்தவரை குதூகலப்படுத்திய காதலி
கலர் பிளைன்ட்நஸ் இருப்பவருக்குக் கண்ணாடி மூலம் கலர் தெரிந்ததால் அவர் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் விடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தைச் சேர்ந்தவர் மேக், 22 வயதான இந்த இளைஞர் சுதந்திர இசையமைப்பாளராக இருந்து வருகிறார்.
தன் இசையின் மூலம் அந்த பகுதியில் பிரபலமான இவர் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறார். இவருக்கு “கலர் பிளைன்ட்நஸ்” எனப்படும் வியாதி இருக்கிறது. இதனால் இவர் கண்களுக்கு எந்த பொருளின் கலரும் தெரியாது. கருப்பு வெள்ளையாகவே இவரது கண்களுக்கு இது தெரியும். இவ்வாறான வியாதிகள் வெகு சிலருக்குத் தான் வரும் என்ற சூழ்நிலையில் மேக்கிற்கு இந்த வியாதி உள்ளது.
இந்நிலையில் மேக்கின் காதலி மேக்கைச் சந்தோஷப்படுத்த விரும்பி இவ்வாறான கலர் பிளைன்ட்நஸ் உள்ள ஒருவர் கண்களுக்குக் கலரை தெரிய வைக்கும் கண்ணாடி ஒன்றை வாங்கி மேக்கிற்குப் பரிசளித்தார். கலர் பிளைன்ட்நஸ் இருப்பவர்களுக்கு இந்த வகை கண்ணாடி ஒன்றே தீர்வு எனச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அந்த கண்ணாடியை வாங்கிய மேக் அதை அணிந்து பார்த்த போது அவருக்கு கலர் தெரிந்தது. அந்த கண்ணாடியை அணியும் முன்புவரை அது கலரை தெரிய வைக்கும் கண்ணாடி என அவருக்குத் தெரியாது.
அதை அணிந்த பின்பு ஆச்சரியத்தில் மூழ்கிய மேக் சுற்றியுள்ள அனைத்தையும் பார்த்து அதிசயித்தார்.
அதை அவரது காதலி வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ள நிலையில் குறித்த விடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.