ரஷ்ய - உக்ரைன் போரால் உலகளவில் பிரபலமான விளாடிமிர் ஜெலன்ஸ்கி ; மீண்டும் ஒளிபரப்பாகவுள்ள அரசியல் நையாண்டி!
உக்ரைன் அதிபரான 44 வயதே ஆன விளாடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy), ரஷியா தொடுத்துள்ள போரால் இன்று உலகம் முழுவதும் பேரப்படும் நபராக மாறியுள்ளார்.
விளாடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) ஆரம்பத்தில் நடிகராக இருந்தபோது உக்ரைனில் டிவி தொடரில் ‘சர்வண்ட் ஆப் தி பீப்பிள்’ (மக்கள் சேவகன்) என்ற அரசியல் நையாண்டி தொடரில் நடித்தார்.
இத்தொடர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 2015-2019 ஆண்டுகளில் டி.வி.யில் ஒளிபரப்பான இந்த தொடரில் ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) , ‘வாசில் பட்ரோவிச் கோலோபோர்ட்கோ’ என்ற பள்ளி ஆசிரியர் பாத்திரத்தில் நடித்து அசத்தினார்.
விளாடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy), ஊழலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி ஒரே நாளில் பிரபலமானார். அதைத் தொடர்ந்து அரசியலில் வந்த அவர் நாட்டின் அதிபராகவும் ஆகி விடுகிறார். இது தான் அந்த தொலைக்காட்சி தொடரின் கதை ஆகும்.
ஆனால், விளாடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) நிஜ வாழ்க்கையிலும் இது நடந்தது. சர்வண்ட் ஆப் தி பீப்பிள் (servant of the people) என்ற பெயரிலேயே தொடங்கப்பட்ட அரசியல் கட்சியில் சேர்ந்ந்து அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்.
2019ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி உக்ரைன் அதிபர் பதவியை விளாடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) ஏற்றார். அதேசமயம் டி.வி. தொடரில் அவர் நடித்தது, நிஜ வாழ்க்கையில் பிரதிபலித்தது.
அவர் அதிபர் பதவிக்கு வந்ததும் இந்த டி.வி.தொடர் நின்று போனது. இந்நிலையில் தற்போது ரஷ்யா தொடுத்துள்ள போரை அவர் துணிச்சலுடன் எதிர்கொண்ள்ள விதம் உலகளவில் மிகவும் பேசப்படும் ஒரு தலைவராக விளாடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) மாறி இருக்கிறார்.
இதன் காரணமாக ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) நடித்த டி.வி. தொடருக்கு உலகமெங்கும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தார் இந்த டி.வி. தொடரை அமெரிக்காவில் மீண்டும் ஒளிபரப்ப உள்ளதாக டுவிட்டர் பதிவில் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
நீங்கள் கேட்டீர்கள். மீண்டும் வந்து விட்டது. சர்வண்ட் ஆப் தி பீப்பிள் மீண்டும் அமெரிக்காவில் நெட்பிளிக்சில் கிடைக்கிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான நையாண்டி நகைச்சுவை தொடரில் விளாடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) ஆசிரியராக நடித்துள்ளார். அவர் ஊழலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய வீடியோவுக்கு பின்னர் பிரபலம் ஆகி எதிர்பாராதவிதமாக நாட்டின் அதிபராகவும் ஆகி விடுகிறார், என கூறப்பட்டுள்ளது.