பிரான்ஸில் வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
பிரான்ஸில் வாகனம் ஓட்டும் சாரதிகளை கண்கானிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பல பகுதிகளில் தனியார் ரேடார் பொருத்திய கார்கள் சுற்றி திரிவதனால் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய, இந்த ரேடர் பொருத்திய வாகனங்கள் அதிக வேகத்துடன் பயணிக்கும் வாகனங்களை கண்டுபிடிப்பதற்கு உதவுகின்றன. இதன் மூலம் ஒருவர் வீதியில் வாகனத்தில் பயணிக்கும் போது தனது வேகம் தொடர்பில் தெளிவாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கணக்கானிக்கும் கார்கள் பின்னால் பயணிக்கும் சந்தர்ப்பங்களில் அவை அதிக வேகத்தில் பயணிக்கும் வாகனத்தை அவதானித்து பதிவு செய்துக் கொள்ளும்.
அதற்கமைய வேகமாக பயணித்த காரின் சாரதி அதற்கான அபராத தொகையை செலுத்த நேரிடும் என குறிப்பிடப்படுகின்றது. இந்த ரேடார் பொருத்திய கார்கள் தனியார் நிறுவனங்களினால் நிர்வகிக்கப்படுகின்றது. அவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றனர்.
அதில் கண்கானிப்பதற்கு பயணிக்கும் சாரதிக்கு அரசாங்கத்தினால் சம்பளம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வேக வரம்பை மீறி பயணிக்கும் வாகன சாரதிகளை கண்டறிந்து அவர்களின் வீடுகளுக்கே கடிதம் அனுப்பி அபராதம் பெறும் நடவடிக்கைகள் இந்த ரேடார் வாகனத்தினால் முன்னெடுக்கப்படுகின்றது.
இதனால் வாகன சாரதிகள் அவதானமாகவும் வேக வரம்புடனும் பயணிக்குமாறும் இந்த ரேடார் கார்கள் எப்போதும் கண்கானித்துக் கொண்டே இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிகளவில் சாரதிகள் அவதானிக்க முடியாத வகையில் வாகனங்களின் பின்னாலேயே இந்த ரேடார் கார்கள் பயணிப்பதாகவும் கூறப்படுகின்றது.