பிரான்ஸில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
பிரான்ஸில் அவதானமாக இருக்குமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் பார்சல் மோசடி தொடர்பிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பார்சல் விநியோக சேவையில் இருந்து குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் பெற்றிருந்தால் உடனடியாக அது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த நாட்களாக பிரான்ஸில் கிறிஸ்துஸ் பார்கள் வந்துள்ளதாகவும் அதற்காக ஒரு தொகை கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் பொது மக்களுக்கு குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றது.
அதற்கான கட்டணத்தை செலுத்த மின்னஞ்சல் அல்லது குறுந்தகலுக்கு வரும் இணைப்பை அழுத்துமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
மேலும் அழுத்தினால் மக்களின் வங்கி கணக்கில் உள்ள பணம் காணாமல் போய்விடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.