நாங்களே அமைதி காக்கும் படையினராக இருக்கிறோம் ; டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்காவுக்கு வரிகள் முக்கியம். வரிகள் மூலம் நாங்கள் கோடிக்கணக்கான டாலர்களை மட்டும் சம்பாதிக்கவில்லை, அமைதி காக்கும் படையினராகவும் இருக்கிறோம் எனஅமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது ஓவல் அலுவலகத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:
வரிகளின் சக்தி
நான் வரிகளின் சக்தியை பயன்படுத்தாவிட்டால், இந்நேரம் 4 போர்கள் நடந்திருக்கும். இந்தியா, பாகிஸ்தானை எடுத்துக் கொண்டால் அவர்கள் போரில் தீவிரமாக இருந்தனர்.
7 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தன. இரு நாடுகளும் அணுசக்தி நாடுகள்.
நான் அவர்களிடம் சரியாக என்ன சொன்னேன் என்பதை வெளிப்படுத்த விரும்பவில்லை. ஆனால் நான் சொன்து மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
அவர்கள் போரை நிறு்திவிட்டனர். இதுவும் வரிகளால் தான் நடந்தது. வர்த்தகத்தை வைத்துதான் சாதித்தேன். இவ்வாறு கூறி உள்ளார்.