கிரீன்லாந்திற்கு வீரர்களை அனுப்ப மாட்டோம் ; போலந்து பிரதமர் அறிவிப்பு
கிரீன்லாந்திற்கு போலந்து வீரர்களை அனுப்ப மாட்டோம் என்று போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
கிரீன்லாந்து அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு மிக முக்கியமானது என்றும், ரஷ்யா அல்லது சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தார்.

இந்நிலையில் இதற்குப் பதிலளித்து டொனால்ட் டஸ்க் கூறியதாவது: நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு இடையே நிலப்பரப்பைக் கைப்பற்ற முயற்சிப்பது 'நமக்குத் தெரிந்த உலகின் முடிவு' என்றும், இது ஒரு அரசியல் பேரழிவு என்றும் எச்சரிக்கிறேன்.
பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன், நார்வே உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்புப் பயிற்சிக்காகத் தங்கள் வீரர்களை கிரீன்லாந்திற்கு அனுப்பியுள்ள நிலையில், போலந்து அந்த முடிவில் சேரப்போவதில்லை என்று தெளிவுபடுத்துகிறேன்.
வீரர்களை அனுப்ப மறுத்தாலும், இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் ஒற்றுமையாகச் செயல்படுவதை உறுதி செய்வேன். இவ்வாறு டொனால்ட் டஸ்க் கூறினார்.