இஸ்ரேலை நிச்சயம் பழிவாங்குவோம்... ஈரான் உயர் தலைவர் சூளுரை!
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவரான 62 வயதான இஸ்மாயில் ஹனியி ஈரான் தலைநகரில் உள்ள வீட்டில் இன்றையதினம் கொல்லப்பட்டுள்ளார்.
இஸ்மாயில் ஹனியியை கொலை செய்தது யார் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
ஆனால், இஸ்ரேல்தான் இஸ்மாயிலை கொலை செய்ததாக ஹமாஸ் ஆயுதக்குழு குற்றம்சாட்டியுள்ளது.
அதேபோல் ஈரான், துருக்கி, கத்தார் போன்ற நாடுகளும் இஸ்ரேலை குற்றம்சாட்டி வருகின்றன.
இவ்வாறான நிலையில், இஸ்மாயிலின் படுகொலைக்கு இஸ்ரேலை பழிவாங்குவோம் என ஈரான் உயர் தலைவர் அயத்துல்லா அலி காமேனி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"இஸ்மாயில் ஹனியி எங்கள் அன்பிற்குரிய விருந்தாளியாக இருந்தார்.தெஹ்ரானில் அவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இஸ்ரேல் தனக்கென ஒரு கடுமையான தண்டனையை தயார் செய்து கொண்டுள்ளது.
இஸ்ரேலை பழிவாங்குவது ஈரானின் கடமை என்று நாங்கள் கருதுகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.