கனடாவில் பேரிடர் காத்திருக்கிறது... ஒன்ராறியோ மக்களுக்கு சிறப்பு எச்சரிக்கை
கனடா முழுவதிலும் ஒவ்வொரு மாகாணத்திற்கும் பிரதேசத்திற்கும் எச்சரிக்கைகள் மற்றும் சிறப்பு வானிலை அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.
கனடாவின் பெரும்பாலான பகுதிகளில் பனிப்பொழிவு, கடும் குளிர் மற்றும் பனிப்புயலுக்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே இரண்டு புயல்கள் மற்றும் கடுமையான குளிருக்கும் வாய்ப்புள்ளதாகவும், ஒன்ராறியோ, கியூபெக் மற்றும் அட்லாண்டிக் கனடா பகுதிகளில் இதன் பாதிப்பு இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், விமான சேவைகள் தாமதமாகலாம் எனவும் அதற்கு பயணிகள் தயாராக வேண்டும் எனவும் ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையம் மற்றும் வான்கூவர் சர்வதேச விமான நிலையம் ஆகியவை எச்சரிக்கை விடுத்துள்ளன.
கனடாவின் மேற்கு கடற்கரைப்பகுதிகள் இந்த வார தொடக்கத்தில் இரண்டு பனிப்புயல்களால் புதையுண்டு போனது, இதனால் பிரிட்டிஷ் கொலம்பியா மொத்தமும் ஸ்தம்பித்துப் போனது.
மேலும், வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவின் பகுதிகள் மற்றும் கிரேட்டர் வான்கூவர் பகுதிக்கு வெளியே கடுமையான குளிர் நிலவும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்ராறியோவில் பனிப்புயலுக்கு வாய்ப்பிருப்பதாகவும் இதன் தாக்கம் கியூபெக்கில் உணரப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் சனிக்கிழமை 20 முதல் 40 செ.மீ பனிப்பொழிவு இருக்கும் எனவும், இதனால் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.