அழகான பெண்ணாக மாற ஆசைப்பட்ட இளம்பெண் மேற்கொண்ட செயல்!
தென்கொரியாவை சேர்ந்த இளம்பெண் செர்ரி லீ (வயது 28). உலகின் மிக அழகான பெண்ணாக தோற்றமளிக்கவேண்டும் என்ற ஆசையால் தன்னை உருமாற்றி கொள்ள விரும்பியுள்ளார்.
இதனால், பிரபல நடிகையான கிம் கர்தேசியனை (Kim Kardashian) பின்பற்றி உள்ளார்.
இதுபற்றி செர்ரி லீ (Cherry Lee) கூறும்போது "கர்தேசியனை பார்த்து வளர்ந்தவள் நான். அவரை போலவே தோற்றமளிக்க வேண்டும் என விரும்பினேன். அவர் எப்போதும் எனக்கு ஓர் உந்துதலாக இருந்தவர். எனது பார்வைக்கு உலகின் மிக அழகிய பெண்மணியாக தெரிந்தவர்" என கூறியுள்ளார்.
கிம் கர்தேசியன் மீது தீராத பற்று கொண்ட லீ தனது 20 வயதில் முதன்முறையாக தன்னை அழகுபடுத்தி கொள்ள அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.
இது 15-க்கும் மேற்பட்ட சர்ஜரியில் கொண்டு போய் அவரை விட்டுள்ளது. முகம், கண்கள், மார்பு, இடுப்பு மற்றும் பின்பகுதி என உடலின் பல இடங்களில் அவருக்கு அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன.
இதன்பின்னர் லீ கூறும்போது,
"நான் உண்மையில் முன்பிருந்ததற்கும், தற்போது இருப்பதற்கும் முற்றிலும் வேறுபட்ட நபராக காட்சியளிக்கிறேன்.
மேற்கத்திய பெண்ணாக தோன்றுகிறேன். எனது கொரிய குடும்பத்தினர் பலருக்கு என்னை அடையாளம் காணக்கூட முடியவில்லை" என பெருமையுடன் கூறுகிறார்.
இந்த அறுவை சிகிச்சைகளை செய்து கொண்டதற்காக வருத்தம் எதுவும் கொள்கிறீர்களா? என கேட்டதற்கு இல்லை என கூறும் லீ "எனது ஒரே வருத்தம் இவற்றை நான் முன்பே செய்திருக்க வேண்டும்" என கூறுகிறார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு இவரது காதலருடன் மனமுறிவு ஏற்பட்டுள்ள நிலையில் தனது உருமாற்ற முடிவையும் அவர் எடுத்துள்ளார்.
தனது தோற்றம் மாறிய பின்னர், உறவை புதுப்பித்து கொள்ள அவரது காதலர் முன்வந்துள்ளார். ஆனால், அதனை மறுத்து விட்டேன் என லீ கூறுகிறார்.
கிம் கர்தேசியன் போன்று தோற்றமளிக்க விரும்பிய பிரேசில் நாட்டு மாடல் அழகி ஒருவர், அதற்காக கடந்த 12 ஆண்டுகளாக ரூ.4 கோடி வரை பணம் செலவிட்டு உள்ளார். இதனை சில வாரங்களுக்கு முன்பு அவர் கூறியுள்ளதாக கூறப்படுகின்றது.