கனடாவில் அதிகரிக்க இருக்கும் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விலைகள்
கனடாவில் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள் ஏற்கனவே அதிகமாக உள்ள நிலையில், அவை மேலும் அதிகரிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பால், வெண்ணெய் மற்றும் மாட்டிறைச்சி போன்ற உணவுப்பொருகளின் விலைகள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன.
பால், இரண்டு லிற்றர் கார்ட்டன் விலை 5.35 டொலர்களாகவும், வெண்ணெய் 454 கிராம் பேக்கின் விலை 5.64 டொலர்களாகவும் உள்ளது.
இந்நிலையில், உணவுப்பொருட்கள் விலை மேலும் 3 முதல் 5 சதவிகிதம் வரை அதிகரிக்கக்கூடும் என 2025ஆம் ஆண்டுக்கான கனடா உணவு விலை அறிக்கை தெரிவிக்கிறது.
அதாவது, ஒரு சராசரி கனேடியக் குடும்பத்தின் மளிகைப்பொருட்களுக்கான செலவு, இந்த ஆண்டில் சுமார் 800 டொலர்கள் வரை எட்ட உள்ளது.
இந்த விலை உயர்வால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது, குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்கள்தான். ஏற்கனவே பல குடும்பங்கள் உணவு வங்கிகளை நாடிவருகின்றன.
ஆரோக்கியம் எல்லாம் பார்க்காமல், குறைந்த விலையில் உணவுப்பொருட்கள் கிடைக்குமா என அந்தக் குடும்பங்கள் தேடத் துவங்கியுள்ளன.
கனேடிய மக்களின் இந்த நிலைக்கு ட்ரம்பின் முரட்டுத்தனமான வர்த்தக அணுகுமுறையும் ஒரு காரணம்.
ஆக, உணவுப்பொருட்கள் விலை ஒழுங்குபடுத்துதல் தொடர்பில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை, கனேடிய மக்கள் அத பலனை அனுபவிக்க இருக்கிறார்கள் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை.