இத்தாலியில் இருந்து இலங்கை சென்றவருக்கு நேர்ந்த கதி!
ஐரோப்பிய நாடான இத்தாலியில் இருந்து இலங்கை சென்றவர் மீண்டும் இத்தாலி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை சென்றவர் இத்தாலி செல்ல முயற்சித்த போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
துருக்கியின் இஸ்தான்புல் ஊடாக இத்தாலிக்கு பயணிக்க முயற்சித்த இலங்கையர் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலைய புறப்பாடு முனையத்தின் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் எல்லைக் கண்காணிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் சமர்ப்பித்த இத்தாலிய குடியுரிமை விசாவை சோதனையிட்ட விமான அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்திற்கமைய, மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் எல்லை கண்காணிப்பு பிரிவிற்கு அந்த நபர் அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு விசாவை தொழில்நுட்ப சோதனைக்கு உட்படுத்திய அதிகாரிகள், அந்த விசா போலியானது என கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த நபர் சில காலங்கள் இத்தாலியில் சாரதியாக செயற்பட்டுள்ளார். அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் இத்தாலியில் வசித்து வருகின்றனர்.
அவர் நீண்ட நாட்களுக்கு முன்னர் இத்தாலியில் இருந்து இலங்கைக்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் அவரது வதிவிட விசா காலாவதியானது.
இதனால் அவர் போலி ஆவணங்களை உள்ளிடக்கி, குறித்த நபர் போலி வதிவிட விசாவை தயாரித்துள்ளார்.
இந்நிலையில் சந்தேக நபர் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.